| |||||
Tweet | |
Translated into Tamil by Santhipriyaஹோக் டீக் செங் சின் ஆலயத்தை (Hock Teik Cheng Sin Temple) பொஹ் ஹக் ஷிய (Poh Hock Seah ) ஆலயம் எனவும் அழைகின்றார்கள். இது சீனாவில் புஜியான் மாவட்டத்தைச் சேர்ந்த ஹோக்கீன் இன மக்களின் ஆலயம். இந்த ஆலயத்தை 1892 ஆம் ஆண்டு அக்டோபர் பதினோராம் தேதியன்று பெனாங் சீன மையத்தில் பதிவு செய்து உள்ளார்கள். ஹோக் டீக் செங் சின் துவக்கம் 1844 ஆம் ஆண்டிலும் கியான் டேக் டோங் (Khian Teik Tong) ஹோக்கீன் சங்கத்தை சேர்ந்தவர்கள் கொடுத்துள்ள நன்கொடையினால் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. கியான் டேக் டோங் ஹோக்கீன் சங்கத்தை சேர்ந்தவர்கள் 1867 ஆம் ஆண்ட நடந்த கலவரத்தில் கிஹீ ஹின் சங்கத்தினருடன் பெனாங் தெருக்களில் சண்டையிட்டனர். அதில் கியான் டேக் டோங் ஹோக்கீன்களுக்கு ஆதரவாக காப்டன் சீனா சுங் கேங் கவி பிரிவினரும் (Kapitan China Chung Keng Kwee) கலந்து கொண்டார்கள். க்ஹு டெயாவ் பான்க் ( Khoo Teeau Pang) என்பவர் தந்த நன்கொடையினால் ஹோக் டீக் செங் சின் இடம் 1850 ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது. அதை சுற்றி உள்ள இடங்களும் 1850 முதல் 1867 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டு உள்ளவை . இந்த ஆலயத்தை ஹோக்கியான் துவா பேக் காங் ஆலயம் என அழைகின்றனர். அதில் மூல தெய்வமாக உள்ளது வளம் மற்றும் செல்வம் தரும் டவோடிஸ்ட் கடவுளே. ஹோக் டீக் செங் சின் சங்கத்தினர் முன்னர் கியான் டேக் டோங் என்ற அமைப்புடன் இணைந்து பணி புரிந்து கொண்டு இருந்ததினால் பின்னர் அதை வேறு பல பெயர்களில் பதிவு செய்யப்பட வேண்டியதாயிற்று. அவை பொஹ் ஹோக் சியா ( Poh Hock Seah) , ஹோக்கியன் கொங்க்சீ (Hokkien Kongsi ) , செங் ஹு சியா ( Cheng Hoe Seah ) மற்றும் தாங் கேங் சியா ( Tong Kheng Seah) என்பன ஆகும். ஒவ்வொன்றும் ஹோக் டீக் செங் சின் ஆலயத்தில் தத் தம்முடைய தனித் தனியான கடவுட்களை வைத்துக் கொண்டு வணங்கி வருகின்றனர். கியான் டேக் சங்கம் என்ற அமைப்பு முற்றிலுமாக தடை செய்யப்பட்டவுடன் ஹோக் டீக் செங் சின் அமைப்பு ஆலயத்தின் கீழ்தளத்தின் நிர்வாகத்தை முழுவதுமாக 1890 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பொஹ் ஹோக் சியா என்ற அமைப்பினர் தம்மிடம் எடுத்துக் கொண்டனர். கியான் டேக் என்ற அமைப்பு தடை செய்யப்பட்டதின் விளைவாக ஏற்பட்டு இருந்த வெற்றிடத்தை நிரப்பி பெனாங்கில் இருந்த ஹோக்கியானின் நலனை பாதுகாக்கவே அப்படிப்பட்ட நிலையை அவர்கள் எடுக்க வேண்டியதாயிற்று. துவா பேக் காங் ஹோக்கியர்களின் கடவுளாக ஏற்கப்பட்டது. அது போல அது பொஹ் ஹோக் சியாவை சார்ந்த வணிகர்களின் குல தெய்வமாகவும் அவர் கருதப்பட்டதினால் அவர்களின் ஆதிக்கம் அங்கு அதிகரித்தது. கைகளில் பெரிய பெரிய ஆலயக் கொடிகளை ஏந்தி, அலங்கரிக்கப்பட்ட பல ஊர்திகளையும் கொண்டு பெனாங் சாலைகளில் ஊர்வலமாகச் செல்லும் பழக்கம் பொஹ் ஹோக் சியாவினர் சிங்கே ( Chingay ) என்ற அமைப்பு முன்னர் ஆரம்பித்து வைத்த ஊர்வலமேயாகும். ஹோக் டீக் செங் ஆலயத்தின் மாடியில் உள்ள இடப்புறப் பகுதியை ஹோக்கியன் கொங்க்சீயினர் நிர்வாகிக்கின்றனர். அவர்கள் தமக்கு உதவுவதற்காக ஸெஹ் டேக் டாங் சாஹ் கொங்க்சி ( Seh Tek Tong Cheah Kongsi ), லியாங் சான் டோங் க்ஹு கொங்க்சி ( Leong San Tong Khoo Kongsi) , கியூ லியாங் டோங் கிம் கொங்க்சி (Kew Leong Tong Lim Kongsi ) , இங் சுவான் டோங் டான் கொங்க்சி ( Eng Chuan Tong Tan Kongsi ) மற்றும் சிட் டேக் தாங் கொங்க்சி (Sit Teik Tong Yeoh Kongsi ) போன்ற உப அமைப்புக்களையும் நிறுவினார்கள். ஹோக்கயேன் கொங்க்சி என்ற அமைப்பு ஐந்து ஆலயங்களை நிர்வாகிக்கின்றது. அவை சுங்கை க்ளுவாங்கில் உள்ள ஹோக் ஹின் கியோங் பாம்பு ஆலயம் (Hock Hin Keong) பிரிட்ஜ் சாலையில் உள்ள செங் ஓங் பியோ (Seng Ong Beow), ஜெலுடாங் எனும் இடத்தில் உள்ள தை தே யியாஹ் எனும் செங் லியாங் கியாங்கில் {Cheng Leong Keong (Tai Tay Yeah Temple}, பாகன் ஜெர்மாலில் உள்ள சுயி பீ கியோங் ஆலயம் (Chooi Bee Keong Temple in Bagan ) மற்றும் டதோ கிரமாத்தில் (Dato கிராமத்சியு தியான் கியோங் (Siew Thean Keong) போன்ற ஆலயங்களாகும் . 1840 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மற்றொரு ஹோக்கயேன் அமைப்பான செங் ஹொ சியா என்ற அமைப்பு ஹோக் டேக் செங் (Cheng Hoe Seah ) ஆலயத்தின் மாடியில் உள்ள வலப்புறப் பகுதியை நிர்வாகித்துக் கொண்டு உள்ளது. அவர்களது கடவுள் செங் சை சூய் சோ ( Cheng Chooi Chor Soo) ஆகும். அதன் தலைவரான டான் செங் ( Tan Cheng) என்பவர் படு லசாங்கின் ( Batu Lanchang ) ஹோக்கயேன் மயான அமைப்பின் தலைவராக 1841 ஆம் ஆண்டில் இருந்தவராம். செங் ஹொ சியா என்ற சங்கம் 1849 ஆம் ஆண்டு ஹோக் டேக் செங்கிற்கு இடம் பெயர்ந்தது. மற்றொரு ஹோக்கயேன் அமைப்பான டாங் கேங் சியாவினர் விவசாயிகளினால் வணங்கப்பட்டு வந்த முனிவர் சின் லாங் சியாங் டே (Sin Long Siang Tay) என்பவரை கடவுளாக ஏற்று பூஜித்து வணங்கி விழா கொண்டாடுகின்றனர். 1890 ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசு கியான் டேக் டோங் என்ற அமைப்பை தடை செய்தப்பின் இந்த மாதிரியான அமைப்புக்கள் ஏற்பட்டன. அவைகளுக்கு தமது சொத்துக்களை கியான் டேக் டோங் சங்கங்கள் மாற்றின. ஆர்மனியன் சாலையில் உள்ள ஹோக்கியான் துவா பேக் காங் ஆலயம், டானியாங் டோகொங்க்கில் ( Tanjong Tokong , ) உள்ள துவா பேக் காங் ஆலயம் போன்றவற்றை பொஹ் ஹோக் சியா என்ற அமைப்பு நிர்வாகிக்கின்றது. டோகொங்க்கில் (Tanjong Tokong , ) உள்ள துவா பேக் காங் ஆலயத்தில் தான் சினியா ஹோயே ( Chneah Hoay ) என்ற வருடாந்திர தீ மூட்டும் விழா நடைபெறுகின்றது. ஹோக் டேக் செங்க சின்னின் ஆலயத்தில் புனர் பராமரிப்பு நடைபெற்றபோது அங்கு புதைக்கப்பட்டு இருந்த மூன்று கொடிகள் கிடைத்தன. அவை 1867 ஆம் ஆண்டு கண்டோனிஸ் கீ ஹின் ( Cantonese Ghee Hin ) மற்றும் வெள்ளைக் கோடி இயக்கத்தை எதிர்த்து நடந்த வன்முறை குழுவினரை சேர்ந்தவை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெனாங்கில் தத்தம் கொள்கைகளைக் கொண்ட தனித்தனியான குழுக்கள் இருந்துள்ளன என்பது தெரிகின்றது . ஹோக்கியான் துவா பேக் ஆலயத்தின் உள்ளே லியாங் சான் டோங் க்ஹு கொங்க்சி அமைப்பு இருந்த ஆர்மனியன் சாலைக்கு தப்பி ஓட ரகசிய வழி இருந்துள்ளது. தப்போது அந்த ஆலயத்தின் நிர்வாணப் பணிகள் RM 1.3 லட்சத்தில் நடைபெற்று வருகின்றது. ![]() ஹோக் டீக் செங் சின் ஆலயத்தின் மாடி ![]() ஹோக் டீக் செங் சின் ஆலயத்தின் மேல் சுவர் பகுதி ![]() செங் ஹொ சியாவினரின்குல தெய்வமான செங் சை சூய் சோ ![]() ஹோக் டீக் செங் சின் ஆலயத்தில் இருந்து ஆர்மனியன் சாலைக்கு தப்பிச் செல்லும் ரகசிய வழி |
![]() ஹோக் டீக் செங் சின் ஆலயம் ![]() மேல் மாடியில் தாங் கெங் சியாவினர் வணங்கும் சின் லாங் சியாங் டே எனும் குல தெய்வம் ![]() ஹோக் டீக் செங் சின் ஆலயத்தில் கதவில் காணப்படும் மங்கிய கடவுள் படம் ![]() ஹோக் டீக் செங் சின் ஆலயத்தில் பொஹ் ஹோக் சியா அமைப்பினர் வணங்கும் குல தெய்வம் ![]() ஊர்வலத்தில் கொண்டு செல்லப்படும் கொடிகளும் கத்திகளும் ![]() ஆலயம் புதுப்பிக்கப்பட்டவுடன் காணப்படும் காட்சி ![]() ஆலயம் புதுப்பிக்கப்பட்டவுடன் காணப்படும் புதிய நாற்காலி , மேஜைகள் ![]() கதவின் மேல் பகுதியில் உள்ள தங்க வேலைபாடு ![]() நன்கொடை பாத்திரம் ![]() In மேல் பகுதியில் உள்ள வேலைபாடுகள் | |
Click for list of Chinese Temples in Penang | ||
![]() ![]() ![]()
![]() ![]()
Point - Click - Discover!Thanks for visiting this webpage. To continue exploring, choose another destination!![]() My World Travel Guides - celebrating a beautiful world beautifully. Earning a living as a Happy Jobless GuyI am a Happy Jobless Guy! I am one of the few people who is fortunate enough to earn an income from my websites that I don't to go out to work. My sites get thousands of visitors every day. It has been a long process, but it is something everybody can achieve, and that means YOU. The following are some articles which you might want to read if you want to do what I do:
![]() |