ஆயிரத்து நூறு படிகள் உள்ள ஆலயம்


Translated into Tamil by Santhipriya
செங் கோன் ஷேசி ஆலயம் (Cheng Kon Sze ) அல்லது செங் ஜி சான் (Cheng Ji Chan ) எனப்படும் ஆலயம் டாவோடிஸ்ட் ஆலயமாகும். பெனாங் மலைப் பகுதியில் அது உள்ளது. அதற்கு அங்கீகரிக்கப்பட்ட பெயர் தெயின் ஹென் ஸான் சவு யுயேன் டாங் செங் கோன் ஷேசி (Thien Hen San Chau Yuen Tong Cheng Kon Sze ) என்பது. அதன் அர்த்தம் தெயின் ஹென் மலையில் உள்ள சவு யுயேன் குகையில் உள்ள செங் கோன் ஷேசி ஆலயம் என்பது. மேலும் அயர் இதாம் தாம் (Ayer Itam Dam) மற்றும் ஆலயத்துக்கு இடைப் பகுதியிலான மலையின் பெயர் புகிட் பேரானா (Bukit Penara) என்பதின் அர்த்தமே தெயின் ஹென் ஸான் என்பது.

செங் கோன் ஷேசியி ல் ஒன்றன் மீது ஒன்றாக உள்ள மூன்று கூடங்கள் (11 October 2008) © Timothy Tye using this photo
செங் ஜி சான் என்பது ஆங்கிலத்தில் ஆயிரத்து இருநூறு படிகள் என்ற அர்த்தத்தைத் தருமாம். ஆனால் இரண்டு என்பது இருநூறு என ஆகி விட்டதாகக் கூறுகிறார்கள். வேறு சிலர் செங் ஜி சான் என்பதின் அர்த்தம் நான்கு எண்களைக் கொண்ட வார்த்தை என்கிறார்கள்.
செங் ஜி சான் என்பது அங்கு செல்லும் பக்தர்கள் கட்டி உள்ள பாறை படிகளைக் குறிக்கின்றது. முன்னர் அவர்கள் கட்டிய பாறைப் படிகள் அப்படியே இருந்தாலும் சில படிக்கட்டுக்கள் சிமெண்டினால் இரண்டாம் உலக யுத்தத்தின் போது அங்கு வந்த ஜபானியர்களினால் நன்கு கட்டப்பட்டு உள்ளது. அந்த ஆலயம் அயர் இதாம் தாமுக்கு கீழே இருந்தாலும் ஆயிரம் படிக்கட்டுக்களை கடந்து செல்ல வேண்டும் என்பதினால் அங்கு செல்ல மக்கள் யோசிக்கின்றனர். செங் கோன் ஷேசி ஆலயம் 1880 ஆம் ஆண்டில் கட்டப்பட்டு உள்ளது. அதன் நுழை வாயிலில் காணப்படும் செய்தியின்படி நுழை வாயில் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதினைந்தாம் தேதியன்று கட்டப்பட்டு உள்ளது என்பது தெரிகின்றது. ஆலயத்தை சுற்றி உள்ள வளாகம் 2007 ஆம் ஆண்டில் கட்டப்பட்டு உள்ளது.

சவூ யுயேன் தாங்கில் இருந்து செங் கோன் ஷேசி (11 October 2008) © Timothy Tye using this photo
செங் கோன் ஷேசி ஆலயம் மூன்று பிரிவுகளாக உள்ளன. நுழை வாயில், ஆலயத்துக்குள் மூன்று கூடங்கள் மற்றும் அதை அடுத்து புராதான கூடம் . சில இடங்களில் பப்பாளியும் ஆஸ்ரேலிய நாட்டு சீதாப் பழ மரங்களும் உள்ளன.
ஆலய நுழை வாயிலை சவூ யுயேன் தாங் (Chau Yuen Tong) என அழைக்கின்றார்கள். தாங் என்றால் குகை என்று அர்த்தம். ஆகவே எதற்காக அதன் பெயரை தாங் என வைத்து உள்ளார்கள் என தெரியவில்லை. அது ஆலய முக்கிய கூடத்தில் இருந்து சுமார் நூறு மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆலயத்தின் மூன்று கூடங்களும் கிழக்கு திசையை நோக்கி அமைந்துள்ளன.
சவூ யுயேன் தாங் நுழை வாயிலில் இருந்து சுற்றி சுற்றி செல்லும் பாதையின் மூலம் ஆலயத்தை அடையலாம். ஆலயத்திற்குள் நுழைந்தால் மூன்று கூடங்களும் ஒன்றின் மீது ஒன்றாக கட்டப்பட்டு உள்ளதை காணலாம். அவை அனைத்துமே நல்ல மஞ்சள் நிறத்தில் வண்ணம் அடிக்கப்பட்டு உள்ளத்தில் இருந்தே அது தன்னை சுற்றிலும் ஒன்பது கடவுட்களை வைத்துக் கொண்டு காட்சி தரும் டாவோடிஸ்ட் பெண் தெய்வமான தௌமூவின் ஆலயம் என்பதை தெரிந்து கொள்ளலாம். அங்குள்ள சிலைகள் பட்டர்வொர்த் டாவ் பூ காங் ஆலயம் மற்றும் பெனாங் டோ போ கியோங் தாய் தை ஆலயங்களில் உள்ள சிலைகளைப் போன்றே உள்ளது.
மூன்று கூடங்களில் கீழே சதுரமாக உள்ள முதல் கூடம் சாவ் யுயேன் மியாவ் (Chau Yuen Miau) எனப் பெயர் கொண்டது. அதன் நுழை வாயிலில் இரண்டு தூண்கள் உள்ளன. சுவற்றின் மேல் விட்டத்தில் இருந்து இரண்டு திரி விளக்குகள் தொங்கிக்கொண்டு உள்ளன. இரண்டு பக்கத்திலும் உள்ள ஜன்னல்கள் நல்ல கலை வேலைபாடுகள் கொண்டதாக உள்ளது. இரு பக்கங்களிலும் ஆலயத்தைப் பற்றிய செய்திகளும் மிருகங்களின் படங்களும் வரையப்பட்டு உள்ளன. மேல் பகுதியில் ஆலயத்தின் பெயர் எழுதப்பட்ட பலகை உள்ளது.

Roadsign pointing the way to Cheng Kon Sze.
மேலே செல்லும் படியில் ஏறிச்சென்றால் யுயேன் மிங் காங் ( Yuen Ming Kong) என்ற பெயர் கொண்ட கூடம் வரும். அங்குதான் டோவ்மு (Doumu) என்ற பெயருள்ள கடவுள் சிலை உள்ளது. அந்த கூடம் எட்டு பகுதி சுவர்கள் கொண்டு பகோடா எனப்படும் மடாலயத்தைப் போல உள்ளது. சௌ யுயேன் மியாவு ஆலயத்தில் உள்ள கதவுகள் மற்றும் ஜன்னல்களில் உள்ள அதே மாதிரியான கலை வண்ணங்கள் இங்கும் உள்ளன.
அடுத்து ஏறிப்போனால் வருவது செங் கோன் ஷேசி எனப்படும் முக்கியமான கூடம். மற்ற இரண்டு கூடங்களில் உள்ள முகமண்டபங்களை விட பெரிய அளவிலான முக மண்டபம் இங்கு உள்ளது. அதில் ஒரு துறவி புலியின் மீது சவாரி செய்தவண்ணம் உள்ளது போன்ற சித்திரம் காணப்படுகின்றது. அங்கிருந்து சுற்றி உள்ள மலைப் பகுதியின் இயற்கை காட்சிகளைப் பார்க்க ரம்யமாக இருக்கும். செங் கோன் ஷேசியின் இடப்புறம் முன்னோர்கள் காலத்தைய காட்சிகளின் மாதிரி வடிவங்கள் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் சில 1940 ஆம் ஆண்டு நடந்த விழாக்களைப் பற்றி எடுத்துக்காட்டும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன.
Getting there
Cheng Kon Sze can be approached by climbing the steps from the United Hokkien Cemetery in Paya Terubong, or by car using the road from Kek Lok Si Temple. The distance is 1.4km (4580 ft). Climbing the steps will take you about one hour, probably more if you stop often. You can reach the temple by car in approximately 15 minutes, going through the bumpy hill road. Take the road that leads to Ayer Itam Dam. Turn in at the archway to the Kek Lok Si Goddess of Mercy Statue. Drive through Kek Lok Si, the Goddess of Mercy Statue (at time of writing, a pavilion is under construction to shelter it), past the Kek Lok Si Columbarium, and watch out for the sign pointing to Cheng Kon Sze. Follow the small, yellow sign through the hill road, and it will lead you to the temple. The one-way distance is 3.7 km (2.3 miles).
Cheng Kon Sze Location Map

ஆலயத்தின் படங்கள்

செங் கோன் ஷேசிக்குச் செல்லும் படிகள் (11 October 2008) © Timothy Tye using this photo

செங் கோன் ஷேசிக்குச் செல்லும் படிகள் (11 October 2008) © Timothy Tye using this photo

செங் கோன் ஷேசியின் நுழை வாயில் (11 October 2008) © Timothy Tye using this photo

செங் கோன் ஷேசிக்குச் செல்லும் பாதை (11 October 2008) © Timothy Tye using this photo

படியில் இருந்து பார்த்தால் தெரியும் செங் கோன் ஷேசி (11 October 2008) © Timothy Tye using this photo

செங் கோன் ஷேசியி ல் உள்ள சாவ் யுயேன் மியாவ் (11 October 2008) © Timothy Tye using this photo

சாவ் யுயேன் மியாவ் வில் உள்ள சித்திரங்கள் (11 October 2008) © Timothy Tye using this photo

யுயேன் மிங் காங்கில் எட்டு பகுதி சுவர்கள் கொண்ட கூடம் (11 October 2008) © Timothy Tye using this photo

யுயேன் மிங் காங்கில் இருந்து பார்த்தால் தெரியும் செங் கோன் ஷேசி (11 October 2008) © Timothy Tye using this photo

செங் கோன் ஷேசியின் முக மண்டபம் (11 October 2008) © Timothy Tye using this photo

செங் கோன் ஷேசியின் உள்ளே உள்ள ஒரு சன்னதி (11 October 2008) © Timothy Tye using this photo

செங் கோன் ஷேசியில் இருந்து பார்த்தால் தெரியும் காட்சிகள் (11 October 2008) © Timothy Tye using this photo

செங் கோன் ஷேசியில் முன்னோர்கள் வசித்த இடம் (11 October 2008) © Timothy Tye using this photo

செங் கோன் ஷேசியில் முன்னோர்கள் வசித்த இடத்தின் உள் பகுதி (11 October 2008) © Timothy Tye using this photo

செங் கோன் ஷேசியில் ஆஸ்ரேலிய நாட்டு சீதாப் பழ மரம் (11 October 2008) © Timothy Tye using this photo

செங் கோன் ஷேசியில் ஆஸ்ரேலிய நாட்டு சீதாப் பழங்கள் (11 October 2008) © Timothy Tye using this photo

செங் கோன் ஷேசியில் இருந்து பார்த்தால் தெரியும் காட்சிகள் (11 October 2008) © Timothy Tye using this photo
|