World Travel GuidesUNESCO World Heritage Site ஜார்ஜ் டவுன் ஹான் ஜியாங் தியொசெவ்
முன்னோர்கள் ஆலயம்


Exotic Tours of Asia
    Compare Hotel Room Rates from different Booking Sites     Follow Me on Pinterest 

Translated into Tamil by Santhipriya

ஆலயத்துக்குச் செல்ல வழி காட்டும் தரைப் படம்

Map below shows the location of the Teochew Ancestral Temple
and a suggested walking route from the Weld Quay Bus Terminal.



Winner of the 2006 Award of Merit
Unesco Asia-Pacific for Culture Heritage Conservation.


ஜார்ஜ் டவுனில் லெபுஹ் சுலியா (Lebuh Chulia ) எ னும் இடத்தில் உள்ளது ஹான் ஜியாங் தியொசெவ் (Han Jiang Teochew Temple ) ஆலயம். அது மாரியம்மன் மற்றும் நாகூர் தர்கா ஷரிப் என்ற இரண்டு வழிபட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ளது. பெனாங்கில் உள்ள தியொசெவ் சங்கத்தினர் அதை நிறுவினார்கள் . அந்த சங்கம் 1855 ஆம் ஆண்டில் அந்த ஊருக்கு வந்த ஆறு தியொசெவ் என்ற இனத்தவரால் ஏற்படுத்தப்பட்டது. அவர்கள் அதை முதலில் அந்த ஊருக்கு வரும் தியொசெவ் இனத்தவர் வந்து தாங்கும் இடமாக இருக்கட்டும் என்பதற்காக நிறுவினார்கள். காலப்போக்கில் சுலியா சாலையில் (Chulia Street ) அனைவரும் வந்து வணங்கும் சமுதாய ஆலயம் அமைக்க ஒரு இடம் வாங்கப்பட்டது. 1890 ஆம் ஆண்டு அங்கு ஹன்ஜியாங் (Hanjiang) என்ற முன்னோர்கள் ஆலயம் அமைந்தது. அது முடியும் தருவாயில் அதன் பெயர் தியொசெவ் கொங்க்சீ என ஆயிற்று . ஆனால் 1935 ஆம் ஆண்டு மீண்டும் அந்த ஆலயம் ஹான் ஜியாங் முன்னோர்கள் ஆலயம் எனப் பெயர் பெற்றது.

மலாசியாவில் உள்ள ஆறு இனத்தவரில் சீன மொழி பேசும் தியொசெவ் என்ற இனத்தவரும் உண்டு. அவர்கள் தெற்கு சீனப் பகுதியில் உள்ள புஜியான் மாவட்டத்தின் எல்லையில் உள்ள குவான்டாங் என்ற மாவட்டத்தைச் சேர்ந்த சவோசவ் என்ற இடத்தில் இருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் அங்கு வந்து வேல்லேஸ்லி (Wellesley) மாவட்டத்தில் தோட்டத் தொழிலாளிகளாக வேலையில் சேர்ந்தவர்கள் . அதன் பின் அவர்கள் ஜார்ஜ் டவுனுக்கு வந்து பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்யத் துவங்கினார்கள்.

பதினெட்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரை நன்யான்கிற்கு (Nanyang) வந்த சீனர்கள் வியாபாரிகளாக இல்லாமல் ஒருவருக்கொருவர் உதவும் வகையில் அங்கிருந்த சங்கத்துக்கு வந்து கொண்டு இருந்தனர். பேசும் மொழி, இனம், பிறந்த இடம் போன்றவற்றை வைத்து அங்காங்கே அவரவர்கள் சங்கம் அமைந்து இருந்தது. அதனால்தான் ஜார்ஜ் டவுனில் இன்றும் கோ சமூகத்தினருக்காக கோ கொங்க்சீ (Khoo Kongsi) , தியொசெவ் சங்கம், கார்பெண்டர் அமைப்பு (Carpenter's Guild) அதாவது கார்பெண்டர் சங்கம் போன்றவை உள்ளன. அந்த சங்கத்தினர் முதலில் அவரவர் பிரிவினை சார்ந்தவர்கள் இடம் பெயர்ந்து அங்கு வந்து குடியேறியபோது அவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் தந்து அங்கு தம்மை வியாபாரங்களில் ஸ்திரப்படுத்திக்கொள்ள அவர்களுக்கு உதவினார்கள்.

முதலில் அமைந்த ஹான் ஜியாங் தியொசெவ் ஆலயம் சி தியான் ஜிங் (si dian jing,) என்ற அமைப்பை போல நான்கு முக அமைப்பாக அமைந்து இருந்தது. பெனாங்கில் மற்ற ஆலயங்களைவிட மிகப் பெரிய அளவிலான கதவினைக் கொண்ட ஆலயமாக இருக்க 1890 ஆம் ஆண்டு அந்த ஆலயத்துக்கு பாதுகாப்பாக இருக்க இன்னொரு கதவு வெளியில் போடப்பட்டது.

மற்ற ஆலயங்களைப் போல் அல்லாது ஹான் ஜியாங் ஆலயம் மூன்று செட் ( ஆறு) கதவுகளைக் கொண்டுள்ளது. மறைந்து போன தியொசெவ் மற்றும் அவர்களின் குல தெய்வங்களுக்கு என ஒரு பலி பீடம் உள்ளது. காலப் போக்கில் மற்ற ஆலயங்களைப் போல இந்த ஆலயமும் கவனிப்பார் இன்றி கிடந்தது . அதனால் அது ஒரு பள்ளிக் கூடமாக உபயோகிக்கப்பட்டது. சரியான முறையில் அது சீரமைகப்படாமல் இருந்ததினால் முன்னர் கட்டப்பட்ட ஆலயத்தின் உண்மையான அழகும் பொலிவும் மறைந்து விட்டது.

ஆகவே அந்த பழமையும் பெருமையும் வாய்ந்த ஆலயம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட 2002 ஆம் ஆண்டு அதை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் தியொசெவ் அங்கத்தினரே உறுப்பினர்களாக இருந்து தமது நேரத்தையும் திறமையும் செலவு செய்து தம்மை முழுமையாக அந்த காரியத்தில் ஈடுபடுத்திக் கொண்டார்கள். நன்கொடை திரட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு சுமார் RM 900,000 (US $ 250,000) திரட்டப்பட்டது. 2003 ஆம் ஆண்டு முதல் அந்த திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்தி ஆலயத்தை பழைய நிலையில் இருந்த கலை நுணுக்கம் வாய்ந்த ஆலயமாக புதுப்பிக்கும் வேலை துவக்கப்பட்டது.

சீனாவிலும் மலாசியாவிலும் அந்த ஆலய வரலாற்றையும் விவரங்களையும் பற்றி நுணுக்கமாகப் படித்து அந்த கட்டிட வேலைக்கு ஏற்ப தேவையான திறமையான வல்லுனர்களையும் வேலையாட்களையும் சீனாவில் இருந்தே அழைத்து வந்தனர். அதனால் முதலில் அமைக்கப்பட்டு இருந்த கட்டிடத்தின் அதே கலை நுணுக்கம் வாய்ந்த பொலிவான வேலைபாடுகளை மீண்டும் வெளிப்படுத்துவது சாத்தியமாயிட்று. அனைவரிடம் இருந்தும் நன்கொடைகளைப் பெற்று இருந்ததினால் அவ்வாப்போது அந்த கட்டிட நிர்மாணப் பணிக்கான வரவு செலவுகளைப் பற்றிய விவரங்களை அந்த கட்டிட நிர்மாணக் குழு தியொசெவ் அங்கத்தினர்களுக்கு தந்து கொண்டு இருந்தனர். அது போலவே அந்த பணியின் துவக்கத்தில் இருந்து முடியும் வரை தியொசெவ் இன கலாசாரங்களையே பின்பற்றி வந்தனர். அற்புதமான புதிய மின்விளக்கு அமைப்பும் செய்யப்பட்டு கலை, ஆன்மீக கலாச்சாரங்களை காட்டும் நிகழ்சிகளை நடத்த வழி வகுக்கும் நிலையில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. முடிவாக 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் புனர் சீரமைக்கப்பட்ட ஹான் ஜியாங் ஆலயம் பொதுமக்களின் உபயோகத்துக்காக திறந்து வைக்கப்பட்டது.

ஆலயம் செல்லும் வழி

வேல்ட் குவாய் Weld Quay Bus Terminalபஸ் நிலையத்தில் இருந்து பெங்கலான் வெல்டில் (Pengkalan) உள்ள பாலத்தைக் கடந்து சென்று அதே பெங்கலான் வெல்டின் பக்கமாகவே நடந்து கட் லேபு சுலியாவை (Gat Lebuh Chulia) அடைய வேண்டும். லேபு பந்தை (Lebuh Pantai) எனும் இடத்தை அடைந்தால் அது லேபு சுலியாவில் கொண்டு விடும். அங்கு சென்றால் லேபு குவீன் என்ற இடத்தின் எதிரில் ஆலயம் தெரியும்.

What to see and do

The Teochew Ancestral Temple is the finest and most exquisite example of early 20th century Teochew architecture in George Town. Admire the door gods with their gold helmets, the sculptures on the roof, the ornaments, even the state-of-the-art fibre-optics lighting element.

Nearby sights

The Teochew Ancestral Temple is located in the middle of a very heritage-rich area, within the George Town Unesco World Heritage Site core zone. Within close walking distance are the following sights. The point of reference is the main entrance of the Teochew temple.

  • Sri Mahamariamman Temple: Cross Lebuh Chulia, and it is on the left side of Lebuh Queen
  • Masjid Kapitan Keling: A short distance away. From the Teochew temple, turn left, go until the junction of Jalan Masjid Kapitan Keling, then turn left again. You will see Masjid Kapitan Keling on the right side of the road.
  • Kuan Yin Teng: From the Teochew temple, turn left, go along Lebuh Chulia until the junction of Jalan Masjid Kapitan Keling, then turn right. You will see Kuan Yin Teng on the left side of the road facing Lebuh China.
  • Nagore Shrine: Turn left along Lebuh Chulia, and you will find it on the opposite side of the road, on the right side of the junction of Lebuh King.
  • Lim Kongsi: Turn left along Lebuh Chulia, and left again at the junction of Lorong Pitt. At the end of Lorong Pitt is Lebuh Ah Quee, with Lim Kongsi right in front.
  • Madrasah Hamid Arabi: Turn left along Lebuh Chulia, and left again at the junction of Lorong Pitt. At the end of Lorong Pitt is Lebuh Ah Quee, with Lim Kongsi right in front. To the right of Lim Kongsi is the Madrasah Hamid Arabi.

    Han Jiang Teochew Temple Photo Gallery


    மாலை வேளையில் ஹான் ஜியாங் ஆலயம்


    காலை வேளையில் ஹான் ஜியாங் ஆலயம்



    ஆலயத்தின் பிரும்மாண்டக் கதவுகள்



    ஹான் ஜியாங் ஆலய வெளிக்கூடத்தில் தியோ செவ் சிலை



    புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தின் மெருகூட்டப்பட்ட தள்ளுக் கதவுகள்



    ஆலய கதவுகளில் தங்க முலாம் பூசப்பட்ட தலை கிரீடத்துடன் காவல் கடவுட்கள்



    மூதையாரின் சிலைகள் , படங்கள்



    மூதையாரின் சிலைகள் , படங்கள்



    தூண்களில் தங்க வண்ணத்தில் எழுத்துக்கள்



    மேல் கூரையில் அற்புதமான கலை சின்னங்கள், சித்திரங்கள்



    சித்திரங்களை பளிச்செனக் காட்ட வைக்கப்பட்டு உள்ள பைபர் ஆப்டிக்ஸ் எனப்படும் மின் சாதனம்



    வெட்டப்பட்டபீங்கான் பாத்திரங்களைக் கொண்டு அமைக்கப்பட்டு உள்ள சியேன் நெயின் (Chien-nien) எனப்படும் சித்திரக் கலையில் அமைக்கப்பட்டு உள்ள



    தியொசெவ் சங்க உறுப்பினர்களுடன் நாங்கள். அதில் சிவப்பு சட்டை போட்டுள்ள நான் உங்களின் வலது புறத்தில் இரண்டாவதாக உள்ளேன்.

    Visiting Penang

    If you're planning a trip to Penang, please go through the information I have assembled in Penang Travel Tips. You'd find there information covering all aspect about Penang, including accommodation, transport, food, shopping, places of interest and more. Everything you need to know Penang is right there at your finger tips!

    Penang Travel Tips articles in Tamil

    Click for list of Chinese Temples in Penang







  • [an error occurred while processing this directive]