பாம்புப் பண்ணை Translated into Tamil by Santhipriya


பாம்புப் பண்ணை வேறு சிலர் முயற்சியினால் பாம்பு ஆலய நிர்வாகிகளின் ஒப்புதலோடு அந்த ஆலயத்தின் பக்கத்திலேயே அமைக்கப்பட்டு உள்ளது. அதைப் பற்றிய விவரம் தனியே தரப்பட்டு உள்ளது.
சுங்கை கேலுகாங் ஆலயத்தின் வளாகத்தில் மிருகக் காட்சி சாலையைப் போல பாம்புகள் பண்ணை என்ற பெயரில் பாம்புகளின் காட்சி சாலை உள்ளது. அங்கு அபூர்வமான அல்பினோ (Albino Cobra) நாகப்பாம்பு முதல் பல வகைப் பாம்புகள் வைக்கப்பட்டு உள்ளன. அதை 2006 ஆம் ஆண்டில் நிறுவியவர் திரு சேவ் பொஹ் ஹூ என்பவர் (Chew Poh Hoo ). அந்த காட்சியகம் அந்த ஆலயத்தில் உள்ள விரியன் பாம்புகளின் நலத்தையும் கவனித்துக் கொள்கின்றது. நான் அங்கு 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதியன்று சென்றேன். திரு சேவ் எனக்கு சீனர்களின் நம்பிக்கைப் பற்றிய சில தகவல்களைக் கூறினார். அதன்படி பாம்பின் தோலை மணிபர்ஸில் வைத்துக் கொண்டால் அதிருஷ்டமாம். அது பர்சில் உள்ள பணத்தை ஒரு பாம்பு காப்பது போல பாதுகாக்குமாம். பாம்புகள் தமது தோலை தாமே உரித்துக் கொள்வதுண்டு. அந்த உரித்த தோலை அங்கு காட்சியாக வைத்து உள்ளார்கள். அந்த தோலை கையில் எடுத்தால் அது உடைந்து விடும். திரு சேவ் சீனர்களின் 'யின்' மற்றும் 'யாங்' என்பவற்றில் நம்பிக்கை கொண்டவர் என்பதினால் அந்த பண்ணையில் பாம்புகளைப் போன்ற 'யின்' மற்றும் எலிகளைப் போன்ற 'யாங்' மிருகங்களையும் வளர்கின்றார். அந்தப் பண்ணையில் திரு சேவ் எனக்கு உடும்பைப் போன்ற ஒரு பிராணியின் கூண்டிற்குள் அழைத்துச் சென்று அதைக் காட்டினார். அது மிருதுவான ஆனால் உடம்பேகும் வழுவழுப்பான தோலைக் கொண்டு இருந்தது.
பாம்புப் பண்ணையில் உள்ள பாம்புகள்
( மார்ச் ஒன்றாம் தேதி, 2009 )






|
Location Map of the Snake Farm

பாம்புப் பண்ணையில் உள்ள பாம்பு ( மார்ச் ஒன்றாம் தேதி, 2009 )

பாம்புடன் விளையாடும்
திரு சேவ் பொஹ் ஹூ ( மார்ச் ஒன்றாம் தேதி, 2009 )

பாம்பு மாலை அணிந்த
திரு சேவ் பொஹ் ஹூ ( மார்ச் ஒன்றாம் தேதி, 2009 )

மாங்காய் தோட்டத்து பாம்பை பார்கின்றார் திரு சேவ் பொஹ் ஹூ
( மார்ச் ஒன்றாம் தேதி, 2009 )

உடும்பைப் போன்ற பிராணியை தொட்டுப் பார்கின்றார்
டிம் ( மார்ச் ஒன்றாம் தேதி, 2009 )

பாம்புப் பண்ணை திரு சேவ் பொஹ் ஹூவுடன் ( Chew Poh Hoo)
டிம் (Tim ) . சேவ் பொஹ் ஹூ பாம்புத் தோலை காட்டி
விளக்குகிறார் ( மார்ச் ஒன்றாம் தேதி, 2009 )

Tim with Mr Chew Poh Hoo, the owner of the Snake Farm (1 March 2009)
|
|