கேக் லோக் சி ஆலயம்

Kek Lok Si Location Map
 கேக் லோக் சி ஆலய வளாகம் (28 January, 2006)
 ஆலய வளாக குளத்தில் உள்ள ஆமைகள் (1 February, 2003)
 புது வருடப் பிறப்பன்று எரிந்து கொண்டு இருக்கும் ஆயிரக்கணக்கான விளக்குகள் (1 February, 2003)
 பிரார்த்தனைக் கூடம் (28 January, 2006)
 புத்தர்களின் சிலைகள் உள்ள மாடிகள் (28 January, 2006)
|
Translated into Tamil by Santhipriya
கேக் லோக் சி ஆலயம் (Kek Lok Si Temple ) என்பது பெப்னாங்கில் உள்ள ஆலயங்களில் மிகப் பெரியதும் புகழ் பெற்ற ஆலயமும் ஆகும் .ஜார்ஜ் டவுன் மற்றும் அயர் இடாமை நோக்கி மலை சரிவில் அமைந்துள்ளது இந்த ஆலயம். மஹாயன புத்த மதம், டாடாயிஸ்ட் மற்றும் சீனர்களின் மத நம்பிக்கை போன்ற மூன்றையும் அடக்கிக் கொண்டு அமைந்துள்ள இந்த ஆலயம் தனித்தன்மை வாய்ந்தது. ஆதி முதலேயே ஹி சான் (He San) அல்லது வாத்து மலை (Crane Hill) எனப்பட்ட ஆயார் இதாம் மலை பகுதி முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவே கருதப்பட்டதின் காரணம், டாடாயிசத்தை பயின்று இறவா வரம் பெற இந்த மலை வழியேதான் துறவிகள் நடந்து சென்றதான ஐதீகம் உண்டு.
பிட் சாலையை சேர்ந்த கருணை தேவியின் (Goddess of Mercy ) மடாதிபதியாக இருந்த குவான் யேன் தெங் (Kuan Yin Teng) என்பவரே கேக் லோக் சி ஆலயம் அங்கு வரக் காரணமாக இருந்தவர். கிவிங் வம்சத்தை சார்ந்தவரும் 1875-1908 ஆம் ஆண்டுகளில் குவான்ஷு என்ற பகுதியை ஆண்டு வந்தவருமான சிங்கடி என்ற மனசு மன்னன் இந்த ஆலயத்தைக் கட்ட 70,000 பகுதி புத்த சூத்திரங்களையும் (Buddhist Sutras) கொண்ட கல்வெட்டுக்களை தானமாகத் தந்தாராம். அந்த ஆலயம் அமைக்க நன்கொடைகளை தந்தவர்களில் சியான் பாட் ஷி , ஜாங் யுனான் (Cheong Fatt Tze) , சியா சூன் செங் (Zhang Yunan) , சுங் கேங் குவி (Chung Keng Kwee) , மற்றும் டை கீ யூன் (Tye Kee Yoon) போன்றவர்கள் முக்கியமானவர்கள். அதனால் தாராளமாக நன்கொடைகளைத் தந்த அவர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களை அந்த ஆலய நிர்வாகிகளாக நியமித்தனர்.
ஹிஷான் குன்றின் மீது $180,000 ஸ்ரைட்ஸ் டாலர் (Straits Dollars) செலவில் முதல் கட்டிடம் எழுப்பப்பட்டது. 1893 ஆம்ஆண்டு பத்து ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு 1904 ஆம் ஆண்டு அந்த ஆலயத்தின் கட்டிடம் கட்டி முடிக்கப்பட 1905 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதிமூன்றாம் தேதியன்று அந்த ஆலயத்தின் திறப்பு விழா நடந்தது.
சுமார் முப்பத்தி ஐந்து ஆண்டுகள் அந்த ஆலயத்தில் எந்தவிதமான சிலைகளும் வைக்கப்படவில்லை. தென் ஆசியப் பகுதியில் அது மிக முக்கியமான மஹாயன புத்த மத ஆன்மீக நிலையமாகவே கருதப்பட்டது. ஆனால் 1927 ஆம் ஆண்டு பெனங்கில் முக்கியமான ஆலயமாகக் கருதும் வகையில் அதில் சிலை வைக்கப்பட்டது. அதற்கு குவான் யேன் சியை (Kuan Yin See) நிறுவக் காரணமாக இருந்தவரும் இந்த ஆலயத்தின் இரண்டாவது தலைவருமாக இருந்தவரே காரணம். இதன் அதிகார பூர்வமான பெயர் ரமா IV (Rama IV) மடாலயம் என்பது. அந்த ஆலயத்தின் அஸ்திவாரக் கல்லை நாட்டவர் தாய் நாட்டை சேர்ந்த ஒரு மன்னன். அந்த மடாலயத்துக்கு பத்தாயிரம் புத்தர்கள் (10,000 Buddhas ) அல்லது பன் போ தாட் (Ban Po That) என்றும் பெயர் உள்ளது. ஆலயத்தில் சீனர்களின் எட்டு வடிவ கீழ் கூடமும் (octagonal base) , மதிய பகுதி தாய் கலையிலும், தலைப் பகுதி பர்மியர்கள் கலையிலும் கட்டப்பட்டு உள்ளன. ஆக இது மஹாயன மற்றும் தேரவாத புத்தமதத்தை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தின் விசேஷமே அங்குள்ள 10000 புத்தர்களின் சிலைகளும் குவான் என்னின் (Kuan Yin) வெங்கலத்தில் செய்யப்பட்டுள்ள முழு உருவச் சிலயுமே.
2002 ஆம் ஆண்டில் 30 .2 மீடர் உயர குவான் யேன் அல்லது கருணை தேவி எனப்படும் அவலோகேடீச்வாராவின் (Avalokitesvara) சிலை மடாலயத்தின் மேல் பகுதியில் உள்ள மலை மீது வைக்கப்பட்டது. அந்த சிலையை வடிவமைத்தவர் மதிப்பிற்குரியவரும் அந்த ஆலயத்தின் தலைவராக இருந்தவருமான பாய் ஷேங் (Bai Sheng) என்பவரே . அவர் 120 மீடர் உயரச் சிலையை முதலில் வடிவமைத்தார். ஆனால் கொஹ் டிஸு கோன் (Koh Tsu Koon) என்பவற்றின் அரசு அதற்கு அனுமதி கௌக்கவில்லை என்பதினால் அதன் உயரத்தைக் குறைக்க வேண்டியதாயிற்று. 2009 ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் தேதியன்று இருபது மாடி கொண்ட கூடாரத்தைக் ( ஆலயம்) கட்டி அந்த சிலையை அதில் வைத்தனர்.
ஆலயம் செல்லும் வழி
ஆலயத்துக்கு செல்ல ராபிட் பெனாங் பஸ் எண்கள் 201, 203, 204, 206, 306 மற்றும் U502 உள்ளன. மலை அடிவாரத்தில் உள்ள ஜலன் பசார் என்ற பஸ் ஸ்டாப்பில் இறங்கி நேராகச் சென்றால் அங்கு ஒரு டி (T) ஜங்க்ஷன் வரும். அங்கிருந்து பார்த்தாலே இடப்புறம் உள்ள ஆலயம் சிறிது தூரத்தில் தெரியும்.
அங்கு என்ன பார்க்கலாம்?
கேக் லோக் சி ஆலயத்துக்கு பல நுழை வாயில்கள் உள்ளன. சுங்கை ஐத் இதாம் என்ற இடத்தில் ஒரு சிறிய நதி உள்ளது. அதில் உள்ள பிரிட்ஜின் ( பாலம்) மீது ஏறிப் போக வேண்டும். அங்கு சென்றால் ஆலயத்துக்கு ஏறிச் செல்ல படிக்கட்டுக்கள் வரும். அந்த இடத்தில் இருபுறமும் ஆலயம் பற்றிய பொருட்களை விற்கும் கடைகள் உள்ளன. பொருட்களை வாங்கும்போது கவனமாக இருந்து பேரம் பேச வேண்டும். அங்கிருந்து சென்றால் நூற்றுக் கணக்கில் ஆமைகள் உள்ள குளம் வரும். அந்தக் குளம் சுத்தமாக இல்லை. வருபவர்கள் அந்த ஆமைகளுக்கு உணவு போடத் தேவையான உணவுப் பொருட்கள் அங்குள்ள கடைகளில் விற்கப்படுகின்றன. அந்தக் கடைப் பாதையைத் தாண்டிச் சென்றால் ஆலயம் வரும். அங்குள்ள ஒரு பெரிய குளத்தின் மத்தியில் ஏழு அடுக்குகளைக் கொண்ட மண்டபம் தெரியும். அது பத்தாயிரம் புத்தர்களைக் கொண்ட மடாலயத்தின் மேல் பகுதியில் காணப்படும். அந்த புத்தர்கள் சிலை உள்ள இடத்துக்குச் செல்ல நன்கு மூடப்பட்ட படிக்கட்டுப் பாதை உள்ளது.
இரண்டு மாடிகளிலும் பல புத்தர்களின் சிலைகள் உள்ளன. அவற்றை சுற்றி தாமரை மலர் போன்ற தோற்றத்தில் மெழுகுவத்திகள் எரிந்து கொண்டு உள்ளன. அந்த ஆலயம் விரிவாக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. சீனர்களின் புது வருடப் பிறப்பன்று போனால் அங்கு எரிந்து கொண்டு இருக்கும் ஆயிரக்கணக்கான விளக்குகளைப் பார்க்கவே ரம்யமாக இருக்கும். அதுவும் மாலை இருட்டியப் பிறகு பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கும்.
Other Sights at Kek Lok Si
 அற்புதமான காட்சியில் கேக் லோக் சி ஆலயம் (1 February, 2003).

ஆலயத்தில் ஆயிரம் புத்தர்கள் உள்ள மண்டபம் (1 February, 2003).

ஆலயத்தில் விளக்குகள் (1 February, 2003).

ஆலயத்து பிராகாரங்களில் விளக்குகள் (1 February, 2003).

ஆலயத்தில் உள்ள அதிகார மையம் (28 January, 2006).

ஆலயத்தில் ஆயிரம் புத்தர்கள் உள்ள மண்டப தோற்றம் (28 January, 2006).

ஆலயத்தின் பழையகாலக் கூறையின் தோற்றம் (28 January, 2006)
 கேக் லோக் சி ஆலய வளாகத்துக்குள் உள்ள பல சன்னதிகளில்
ஒன்றின் தோற்றம்.
(28 January 2006) © Timothy Tye using this photo

2002 ஆம் ஆண்டு செய்து முடிக்கப்பட்ட கருணை மாதா எனும் அவலோகேடீச்வாராவின் (Avalokitesvara) சிலை (1 February, 2003)

புத்தர்களின் சிலைகள் உள்ள கூடம் (1 February, 2003)

மாலை நேரத்தில் விளக்குகளின் ஒளியில் புத்தர்களின் தோற்றம் (1 February, 2003)

இரவில் மின் விளக்கு வெளிச்சத்தில் 10000 புத்தர்கள்
உள்ள மண்டபத்தின் ஆலயத்தின் தோற்றம்
(1 February, 2003)

இரவில் மின் விளக்கு வெளிச்சத்தில் 10000 புத்தர்கள்
உள்ள மண்டபத்தின் ஆலயத்தின் தோற்றம்
(1 February, 2003)

மின் விளக்கு வெளிச்சத்தில் அயர் இதாம் மலைக் குன்றின் மேலிருந்து பார்த்தால் தெரியும் ஆலய தோற்றம் (19 February, 2005)

இரவு மின் விளக்கு வெளிச்சத்தில் ஆலயவளாகத்தின் தோற்றம் (19 February, 2005)
 பெனாங் மலையில் இருந்து தெரியும் ஆலயவளாகத்தின்
தோற்றம்
(29 July, 2007)
|