ஜெலுடாங் டை டே யாஹ் ஆலயம்

Jelutong Tai Tay Yah Temple Location Map
|
Translated into Tamil by Santhipriya
ஜெலுடாங் டை டே யாஹ் (Jelutong Tai Tay Yah) என்ற ஆலயத்தின் அரசாங்க பதிவு பெற்றப் பெயர் செங் லியோங் கியாங் (Cheng Leong Keong) அதாவது கிவிங் லாங் காங் (Qing Long Gong) என்பது. அந்த ஆலயத்தில் உள்ள மருத்துவக் கடவுளின் பெயர் பயோ சாங் டாடி (Bao Sheng Dadi) என்பது. அவர் மருத்துவராக இருந்து பின்னர் தெய்வமானவராம். வூ டவோ என்ற பெயரில் சாங் வம்சத்தின் மருத்துவராக இருந்தவர் ஞானம் பெற்று தெய்வமானவர். ஆனால் அவர் இந்த பூமியிலேயே மனித உருவில் இருந்துகொண்டு வியாதிகளினால் அவதிப்பட்ட மக்களின் துயரத்தை தீர்க்க விரும்பினார். அதனால்தான் அவர் ஞானம் அடைந்தாலும் விரைவிலேயே நிர்வாணத்தை எய்த விரும்பாமல் பூமியில் தங்கினார். சீனர்கள் அவருக்கு பல இடங்களிலும் பயோ சாங் டாடி என்ற பெயரில் பல இடங்களிலும் ஆலயம் அமைத்து வழிபட்டனர்.
ஜெலுடாங் டை டே யாஹ்ஹின் ஆலயம் 1886 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஆலயத்தில் பயோ சாங் டாடியைத் தவிர கூங் ஷுயி ஹுஷி என்ற கடவுளின் சிலையும் உள்ளது.
ஆலயம் செல்லும் வழி
அந்த ஆலயத்துக்கு ராபிட் பெனாங் பஸ் எண்கள் 11, 301, 302, 303, 401, U502, மற்றும் U704 அனைத்தும் செல்கின்றன. நீங்கள் வேல்ட் குவி பஸ் நிலையத்தில் (Weld Quay Bus Terminal) இறங்கி அங்கிருந்து ஜெலுடாங் போஸ்ட் ஆபீஸ் வரை சென்று அங்குள்ள பாதையைக் கடக்கவும். அங்கு லேபுரஹா ஜெலுடாங் (Lebuhraya Jelutong) என்ற சாலையில் நுழைந்து சுமார் 120 மீட்டர் தொலைவு நடந்து இடதுபுறம் வரம் தமன் ஜெலுடாங்கில் (Taman Jelutong) நுழைந்தால் அந்த சாலையின் கடைசியில் ஆலயம் தெரியும்.
What to see and do
The Jelutong Tai Tay Yah Temple is not geared to accept tourists. Most of the visitors are devotees who already know the purpose of their visit. As a tourist, you may just wander around, taking a look at the altar, the bell, the ceremonial drum hung near the ceiling, but unless you speak Chinese, you may not be able to get any information out of the caretakers.
Jelutong Tai Tay Yah Temple Photo Gallery
 ஜெலுடாங் டை டே யாஹ் ஆலயம் (14 June 2007)
 ஆலயத்தில் உள்ள ஆலய மணி (14 June 2007)
 ஆலயத்தின் உள்ளே (14 June 2007)
 ஆலயத்தின் கூரை மீது காணப்படும் டிராகன் உருவச் சிலை (14 June 2007)
|