ஜேட் மன்னனின் கூடாரம்

Location Map
Map below shows the Jade Emperor Pavilion (No. 1) and the Bat Cave Temple (No 2)
which are within walking distance of each other near the Penang Hill Railway Station.
|
Translated into Tamil by Santhipriya
த்னி கோங் நுவா (Thni Kong Tnua) அல்லது ஜேட் மன்னனின் கூடாரம் (Jade Emperor's Pavilion) என்பது பெனாங் மலை அடிவாரத்தில் அயர் இதாம் (Air Itam) என்ற இடத்தில் உள்ளஒரு ஆலயம் . கூடாரம் என்ற பெயர் கொண்டாலும் அது உண்மையில் டவோடிஸ்ட் ஆலயம் ஆகும். பெனாங் ரயில் நிலையத்தின் வெகு அருகில் உள்ளது இந்த ஆலயம்.
ஜேட் மன்னனின் கூடாரம் என்பது த்னி கோங் எனும் ஜேட் மன்னனை வழிபட ஏற்படுத்தப்பட்ட ஆலயம். த்னி கோங் என்றால் சொர்க்கத்தில் உள்ள பாட்டனார் ( அப்பாவின் அப்பா ) என்பது அர்த்தம். ஹுவாங் ஷாங்டி ( Huang Shangdi ) என்பவர்களின் பட்டப் பெயரே தூய்மையான ஜேட் மன்னன் என்பது. சீனர்களின் டவோடிஸ்ட் தெய்வ வம்சத்தில் உள்ள முக்கியமான தெய்வமான அவர் சொர்கத்தை ஆள்பவராம். ஜேட் மன்னனை வணங்குவது என்ற பழக்கம் ஒன்பதாம் நூற்றாண்டில் அவரை ஆளுநர்கள் தமது ராஜ்ய தெய்வமாக ஏற்றுக் கொண்டது முதல் துவங்கியது.
மற்ற டவோடிஸ்ட் தெய்வங்களின் அவதாரங்களைப் பற்றிய செய்தியைப் போலவே ஜேட் மன்னனின் பிறப்பு பற்றிய செய்திகளும் சீனப் புராணங்களில் இப்படியாக கூறப்பட்டு உள்ளது. மிகவும் ஆனந்தமயமான நிலையில் ராஜ்யத்தை வைத்து இருந்த ஒரு மன்னனுக்குப் பிறந்தவரே ஜேட் மன்னன். அவர் தந்தை மரணம் அடைந்தவுடன் அவர் ராஜ்ய பரிபாலனத்தை ஏற்றார். ஒவ்வொரு பரிசோதனைக் காலமும் 120,976 ஆண்டுகள் என கணக்கிடப்பட்டு 1750 முறை பரிசோதனைகளுக்கு அவருடைய தந்தையார் ஆளாகி இறவா நிலை பெற்று சொர்கத்தை அடைந்தார். ஒரு லட்ஷ ஆண்டுகளுக்கு பின்னால் அவர் ஜேட் மன்னனாக பதவி ஏற்றார். டவோடிஸ்ட்டுக்களின் நம்பிக்கையின்படி அவர்தான் ஆண் மனிதர்களையே படைத்தவராம். அவர் களிமண்ணில் ஆண் பொம்மைகளை செய்து அது கெட்டியாக வேண்டும் என்பதற்காக சூரிய ஒளியில் வைத்தார். அதன் பின் மழை வந்தபோது அந்த மண் பொம்மைகள் மழையில் நனைந்து உருகிவிட அவை குறையுள்ள மனிதர்களாக உயிர் பெற்று எழுந்தன. சீனாவில் டவோடிஸ்ட் வழிபாட்டை கொண்டுள்ளவர்கள் ஜேட் மன்னனின் கதையை இப்படித்தான் கூறுகிறார்கள்.
இன்னொரு கதை இது. ஜேட் மன்னன் ஒரு முறை பூமியில் இருந்த அனைத்து மிருகங்களையும் சொர்கத்துக்கு அழைத்து தன்னுடன் விளையாடுமாறு கூறினாராம். ஏன் எனில் அவர் அதுவரை பூமிக்கே சென்றது இல்லை என்பது மட்டும் அல்ல மிருகங்கள் என்பது என்ன அவை எப்படி இருக்கும் என்பதைப் பார்த்தது இல்லை. அவர் அழைத்தபோது பூமியில் இருந்த ஒரு பூனை ஒரு எலியை அழைத்து ஜேட் மன்னனைப் பார்க்கப் போக வேண்டும் என்பதினால் மறுநாள் காலையில் தன்னையும் எழுப்பி விடுமாறு கூறியதாம். ஆனால் அந்த எலியோ தன்னை பூனையுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டது. தன்னை விட பூனை அதிக கவர்சியாக இருந்ததினால் தான் மதிக்கப்படாமல் போய்விடலாம் எனக் கருதி மறுநாள் பூனையை அந்த எலி எழுப்பவில்லை என்பதினால் பூனையினால் மன்னனைப் பார்க்கப் போக முடியவில்லை. பூனைக்குப் பதிலாக ஒரு பன்றி மன்னனைப் பார்க்கச் சென்று விட்டது. அவைகளைக் கண்ட மன்னன் மிகவும் மகிழ்ந்து போய் அவைகளை கவரவிக்கும் வகையில் அவற்றின் பெயர்களை சீனர்களின் ஆண்டுகளுக்கு வைக்க அதுவே சீனர்களின் பன்னிரண்டு ராசி ஆண்டுகளின் பெயர்களாயிற்று. அதைக் கேட்ட பூனை எலியின் மீது கோபமுற்றது. அது முதல்தான் இரண்டும்
 பெனாங்கில் ஜேட் மன்னனின் கூடாரம். மாபெரும் முக்கோண வடிவிலான மேல் கூரை (28 January, 2006)
1905 ஆம் ஆண்டை சேர்ந்த அயர் இதாம் (Air Itam) என்ற இடத்தில் உள்ள த்னி கோங் நுவா (Thni Kong Tnua) அல்லது ஜேட் மன்னனின் கூடாரம் (Jade Emperor's Pavilion) என்பது ஒரு அபூர்வமான ஆலயம் . கண்டோனிஸ் ஹோக்கியான் ஆலய டிரஸ்டியான குவான் யின் டெங் (Kuan Yin Teng) என்ற கோங் ஹாக் கியோங் (Kong Hock Keong) என்பவரே இதையும் நிறுவினார். 1869 ஆம் ஆண்டு முதல் அந்த இடத்தில் ஒரு டயோடிஸ்ட் ஆலயம் இருந்ததினால் ஜேட் மன்னனின் கூடாரத்தை 140 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட ஆலயம் என்கிறார்கள்.
1931 ஆம் ஆண்டுவாக்கில் ஹா பார் வில்லாவை (Haw Par Villa ) சேர்ந்த சகோதரர்களான அவ் பூன் ஹாவ் மற்றும் அவ் பூன் பார் ( Aw Boon ஹவ் மற்றும் Aw Boon Par ) என்பவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியினால் அந்த ஆலயம் ஓரளவு சீரமைக்கப்பட அப்போது கட்டப்பட்ட எட்டு வடிவ கூடம் இன்னமும் உள்ளது என்றாலும் 2002 ஆம் ஆண்டில் அந்த ஆலயம் மீண்டும் நன்கு புதுப்பிக்கப்பட்டது.
ஜேட் மன்னனின் கூடாரம் போனிக்ஸ் (Phoenix ) மலை எனப்படும் பாங் சான் (Fong San) என்ற குதிரைக் குளம்பு மேட்டில் அமைந்து உள்ளத்தின் காரணம் அந்த இடத்தில்தான் டயோடிஸ்ட்டுகளின் புனித மிருகங்களான பச்சை டிராகன், கருப்பு ஆமை, சிவப்பு மயில் மற்றும் வெள்ளை புலி போன்ற நான்கும் நான்கு திசைகளையும் பாதுகாத்தவண்ணம் அமர்ந்து உள்ளனவாம்.
த்னி கோங் நுவா ஆலயம் தனித்தன்மை வாய்ந்தது என்பதற்கு இன்னொரு காரணம் அதை நிர்வாகிப்பது புத்த மதத்தின் துறவிகள்தான். 1905 முதல் 1915 ஆம் ஆண்டுவரை அந்த ஆலயத்தின் மடாதிபதியாக இருந்தது ஜென் புத்தமதத்தைப் போதித்தவரான அப்போத் ஜிங் மிங் (Abbot Jing Ming) என்ற மகாயான புத்த மதத் துறவிதான். 2002 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்படத் துவங்கிய அந்த ஆலயத்தின் வேலைபாடுகள் சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட கலைஞர்களினால் செய்யப்பட்டது. ஏன் என்றால் அதற்கான தகுந்த கலைஞர்கள் உள்ளூரில் கிடைக்கவில்லை. வந்தவர்களில் முப்பத்தி மூன்று கலைஞர்கள் புஷோவ் (Fuzhou) என்ற இடத்தை சேர்ந்தவர்கள். சிங்கப்பூரில் இருந்த புகழ் பெற்ற தியான் ஹாக் கேங் ஆலயத்தின் (Thian Hock Keng Temple) புனர் நிர்வாணப் பணிகளை மேற்கொண்ட பல கலைஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.
ஜேட் மன்னனின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாட வரும் பக்தர்களினால் அந்த ஆலயம் சீனர்களின் புது வருடத்தின் எட்டாம் நாளன்று மிக அதிக அளவு கூட்டம் கொண்டதாக உள்ளது. நான் டயோடிஸ்ட்டோ அல்லது புத்த மதத்தை சார்ந்தவனோ அல்ல என்றாலும் இப்படிப்பட்ட ஆலயங்களின் அழகைப் பார்க்க வரும் விருந்தாளிகளுக்கு உதவியாக இருக்கட்டும் என்பதினால் அவற்றைப் பற்றிய செய்திகளை எழுதுகிறேன்.
ஆலயத்துக்கு செல்லும் வழி
இந்த ஆலயத்துக்கு ராபிட் பெனாங் பஸ் U204 செல்கின்றது. பஸ் நிலையத்தில் இறங்கி நேராக நடந்தால் பெரிய வளைவு வரும். அங்கிருந்து சென்றால் ஆலயத்தைப் பார்க்கலாம்.
What to see and do
The Jade Emperor Pavilion was recently restored. Go inside and admire the pavilion itself, which has the largest tragrams dome of any Taoist temples in the region. The temple is resplendent in its crimson lacquer.
Nearby Sights
The following are sights within the immediate vicinity or close by:
Bat Cave Temple: Just a walking distance away
Beow Hiang Lim Temple
Huat Huah Liam Temple
Ayer Itam Maha Mariamman Temple
Kek Lok Si: Not actually close by, since you have to drive or take the bus there, but worth a visit if you have the time
 இறுதி கட்ட வேலைகள் நடக்கும்போது எடுத்தப் படம் (28 January, 2006)
 ஆலயத்தின் வெளிப்பகுதியில் உள்ள மூன்று புத்தர்களின் சிலைகள் (28 January, 2006)
 கதவுகளில் பயங்கர உருவில் காணப்படும் காவல் தேவதைகள் (28 January, 2006)
 ஆலயத்தில் சீனப் புராணங்களில் கூறப்பட்டு உள்ள சில தேவதைகளின் உருவங்கள் (28 January, 2006)
 ஆலய சன்னிதானத்தில் உள்ள ஜேட் மன்னனின் சிலை (28 January, 2006)
 ஆலயத்தின் முக்கோணக் கூரை மீது காணப்படும் அற்புத வேலைபாடுகள் (28 January, 2006)
 ஆலயத்தின் மீது காணப்படும் அற்புத வேலைபாடுகள் (28 January, 2006)
 ஹா சகோதரர்கள் கட்டிய சிறிய கூடாரம் (28 January, 2006)
|