ஹாங் சன் சியா ஆலயம்
Translated into Tamil by Santhipriya
ஜாலன் மஸ்ஜித் நகரி (Jalan Masjid Negeri) எனும் இடத்தில் உள்ள கிரீன் லேன் (Green Lane) எனும் இடத்தில் உள்ள ஹோக்கியன் பிரிவை சேர்ந்த ஹாங் சன் சியா ஆலயம் பழமையானது. 1805 ஆம் ஆண்டில் அது கட்டப்பட்டபோது ஜார்ஜ் டவுனில் ஆங்கிலயர்கள் புதியதாய் வந்து தங்கத் துவங்கிய நேரம். சீனாவின் தென் பகுதியில் உள்ள புஜியான் மாகாணத்தை சேர்ந்த நலன் (Nan'an, ) , யாங் சுன் (Yongchun) மற்றும் குவான்ஷவுவில் உள்ள அன்ங்ஷி ( Anxi -Quanzhou) போன்ற இடங்களில் இருந்து வந்து தேங்காய் மற்றும் பிற தோட்டங்களில் தங்கிய ஹோக்கியன் மக்கள் தமது குல தெய்வத்துக்கு என அந்த ஆலயத்தை நிறுவினார்கள். ஆலய சுவற்றில் அந்த ஆலயத்தை நிறுவியவர்களின் பெயர்களை செதுக்கி உள்ளனர். அவர்களில் சிலரான யோங்க்சுன் (Yongchun) மாவட்டத்தை சேர்ந்த மெங் சின்சின் (Meng Chengjin ) , நலனை சேர்ந்த லியாங் கவுட்டிங் (Liang Guangting ) மற்றும் அன்ங்ஷியை சேர்ந்த யப் ஹுப் கிட் (Yap Hup Keat) என்பவர்களின் பெயர்கள் உள்ளன.
 ஹாங் சன் சியா ஆலயம் (23 September 2008) © Timothy Tye using this photo
அடுத்த சில ஆண்டுகளில் அந்த இடம் நன்கு வளர்ச்சி பெற்றது. அந்த காலத்தில் தோட்டங்களின் வழியே போடப்பட்டு இருந்த கிரீன் லேன் எனப்படும் சாலை கிராமங்களில் உள்ள சாலையைப் போல இருந்தது. அது நன்றாக போடப்படவில்லை. கால ஓட்டத்தில் அந்த கிரீன் லேன் பகுதி நல்ல வளர்ச்சி பெற்று ஜாலன் மஸ்ஜித் நகரி எனப் பெயர் பெற்று இந்த ஆலயம் அங்கு வரக் காரணம் ஆயிற்று. ஆலயமும் முன்னர் இருந்த நிலையில் இருந்து மாறி பெரும் மாறுதலை அடைந்து உள்ளது.
 ஆலயத்துக்குள் நுழையும் பிரதான வாயில் (23 September 2008) © Timothy Tye using this photo
ஆலயம் செல்லும் வழி
ராபிட் பெனாங் பஸ் எண்கள் 11, U206, 304 போன்றவற்றில் ஏறி ஜலான் மஸ்ஜித் நகரியை அடைந்து கெம்பிரா பராடே (Gembira Parade) முன்னால் இறங்க வேண்டும்.
ஆலயத்தில் பார்க்க வேண்டியவை
ஆலயம் மிகப் பெரியது. சுவர்களில் பளிங்குக் கற்கள் புதைக்கப்பட்டு உள்ளன. ஆலய கூடத்தில் சீனர்களின் புராண வரலாற்றைக் காட்டும் சித்திரங்களும், வர்ணனைகளும் உள்ளன.
ஆலயத்துக்கு செல்லும் வழி- தரை படம்



ஆலயத்து கதவில் காவல் தெய்வம் (23 September 2008) © Timothy Tye using this photo

ஆலயத்தில் மூல சன்னதியில் கடவுள் (23 September 2008) © Timothy Tye using this photo

ஆலயத்தில் நினைவுக் கல் (23 September 2008) © Timothy Tye using this photo
 ஆலயத்தில் சித்திர வேலைபாடுகள் கொண்ட பளிங்குக் கற்கள்
(23 September 2008) © Timothy Tye using this photo
|