World Travel GuidesDoor Gods
Translated into Tamil by Santhipriya


Exotic Tours of Asia
    Compare Hotel Room Rates from different Booking Sites     Follow Me on Pinterest 
 

பாம்புகளின் ஆலயத்தில் உள்ள கதவுகளில் காணப்படும் உருவங்கள்

ஆலயத்தில் உள்ள கதவுகளில் காணப்படும் வண்ணமயமான சித்திரங்கள் கைகளினால் வரையப்பட்டவை. 599-649 AD ஆண்டில் நாட்டை ஆண்ட டாங் வம்சத்தை ( Tang Dynasty) சேர்ந்த டான் தைசாங் என்ற மன்னன் தனது இரண்டு ராணுவ தளபதிகளான கியூன் ஷுபாவோ மற்றும் யூச்சி ஜிங்கடே (Qin Shubao and Yuchi Jingde) என்பவர்களை கவுரவிக்க அவர்கள் விரும்பிய சித்திரங்களை தனது மாளிகையில் வரையச் சொன்னதையடுத்து சித்திரங்களை சுவற்றிலும் கதவிலும் வரைவது பழக்கத்தில் வந்தது.

அந்த மன்னனை அனு தினமும் இரவில் ஒரு டிராகன் (பறக்கும் நாகம் போன்றது) வந்து பயமுறுத்தியதினால் அவர் கியூன் ஷுபாவோ மற்றும் யூச்சி ஜிங்கடே என்ற இரண்டு தளபதிகளை நுழை வாயில் கதவில் காவலுக்கு அமர்த்தினார். அது முதல் அந்த டிராகன் வருவது நின்றது. அதன் பின் அந்த இரண்டு தளபதிகளின் படத்தை கதவில் வண்ணத்தில் வரைந்து வைத்தபோதும் அந்தப் படங்களைக் கண்டும் பயந்து போன டிராகன் திரும்ப அங்கு வரவே இல்லையாம். ஆகவே அந்த தளபதிகளுக்கும் வாயிலில் காவல் காக்கும் வேலை பளு குறைந்தது. அது முதல் பெனாங்கில் இருந்தவர்கள் கதவுகளில் அந்த மனிதர்களின் உருவங்களை வரைவதை கடை பிடித்தனர். அதனால்தான் அந்த ஆலயக் கதவுகளிலும் அவர்களைப் போன்ற படங்கள் வரையப்பட்டன.

கதவுகளில் உள்ள காவலர்கள் உருவங்கள் எதிரெதிரில் உள்ள கதவுகளில் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு இருக்குமாறு வரையப்பட்டு உள்ளது. கியூன் ஷுபாவோ அல்லது கியூன் கியோங் என்பவர் வெளிர் நிறத்தில் கையில் ஒரு வாளை ஏந்தியவாறு காட்சி அளிக்க, யூச்சி ஜிங்கடே அதாவது யுச்சி காங் என்பவர் கரிய நிறத்தில் கையில் ஒரு தடியுடன் காட்சி தருகிறார். இவர்களைத் தவிர அங்கிருந்த காட்டில் வசித்து வந்த இரண்டு சகோதரர்களான ஷேன் ஷூ மற்றும் யூ லீ போன்றவர்களின் உருவங்களும் பலர் வீட்டுக் கதவுகளில் வரையப்பட்டு உள்ளன. ஒரு புராணக் கதையின்படி அந்த மலைப்பகுதியில் ஒரு அசுரன் இருந்தானாம். அங்கு இருந்த ஒரு விசேஷ பழத்தை உண்டால் தானும் கடவுளாகி விடலாம் என்ற எண்ணத்தில் அது அந்த காட்டுக்கு பழத்தைத் தேடி வந்தபோது அதை அந்த சகோதரர்களான ஷேன் ஷூ மற்றும் யூ லீ என்ற இருவரும் அடித்துத் துரத்தினார்களாம். ஆகவே அவர்களும் வீட்டிற்குப் பாதுகாவலர்களாக கருதப்பட்டனர்.

இந்தப் படங்களில் ஆலயக் கதவில் காணப்படும் அற்புதமான வண்ணமயமான உருவங்களைப் பாருங்கள். அவை அந்த ஆலயம் 2008 -09 ஆண்டில் புதுப்பிக்கப்பட்டவுடன் எடுக்கப்பட்டவை.

Snake Temple Door Gods

The door gods of the Snake Temple were restored in 2008-2009 and were resplendent when I photographed them.

      

      

      

      

Return to Penang Snake Temple

Click for list of Chinese Temples in Penang



Penang Travel Tips articles in Tamil

[an error occurred while processing this directive]