 Cantonese Tua Pek Kong Temple

Translated into Tamil by Santhipriya
கண்டோனீஸ் ( Cantonese) துவ பேக் காங் ஆலயம் டயோயிஸ்ட் ஆலய பிரிவை சார்ந்தது. அது ஜார்ஜ் டவுனில் உள்ள யுனேஸ்கோ ஹெரிடேஜ் (George Town UNESCO World Heritage Site) அமைப்பின் கீழ் உள்ள அது கிங் சாலை 32, 32A & 34யில் ஹெயோங் சான் ஹாவே காவுன் ( Heong San Hoay Kuan ) மற்றும் நின் யாங் (Nin Yong Temple) ஆலயத்தின் இடையே உள்ளது.
துவா பெட் காங் தெய்வமாகக் கருதப்பட்டவர். பதினெட்டாம் நூறாண்டில் மலாய் தீபகற்பத்தில் வாழ்ந்தவரான அவர் பெயர் ஜாங் லீ (Zhang Li) . அவர் ஹக்கா (Hakka) எனும் பிரிவை சேர்ந்தவர் . சுமத்ரா தீவை நோக்கிச் சென்று கொண்டு இருந்த அவருடைய கப்பல் பெனாங்கில் தரை இறங்கியது. அவர் பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்சிஸ் லைட் (Francis Light) என்பவர் ஆங்கிலேயர்களுக்காக ஜார்ஜ் டவுனை ஸ்தாபிக்கும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னாலேயே அங்கு வந்தவர்.
ஜாங் லீ மரணம் அடைந்தப் பின் மலையில் இருந்த சீனர்கள் அவரை துவா பெட் காங் என்ற பெயரில் வணங்கத் துவங்கினார்கள். அவரை வணங்குவதின் மூலம் தமக்கு செல்வம் தலைக்கும் என நம்பிய சீனர்கள் அவருக்கு கிழக்கு மற்றும் மேற்கு மலாசியா, சிங்கப்பூர் போன்ற இடங்களில் ஆலயங்களை அமைத்தனர். அவருடைய ஆலயங்களுக்கு தாராளமாக நன்கொடைகளை தருகிறார்கள். அந்தந்த ஆலயங்களுக்கு பொருள் சேர்ப்பது இரு பிரிவினரிடையே போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தி உள்ளதினால்தான் கண்டோனீஸ் மற்றும் உடன்பிறவா சகோதரர்கள் என அழைக்கப்படும் ஹோக்கியன் மற்றும் ஹக்காஸ் (Hokkien / Hakkas ) பிரிவினர் வணங்கும் இரு பிரிவு ஆலயங்களாயின.
கிங் சாலையில் உள்ள துவா பெட் காங் ஆலயத்தில் கண்டோனீஸ் மற்றும் ஹக்காஸ்பிரிவினரும், ஆர்மனியன் சாலையில் ஹோக் டேக் செங் சின் (Hock Teik Cheng Sin ) எனும் இடத்தில் உள்ள துவா பெட் காங் ஆலயத்தில் ஹோக்கியன் பிரிவினரும் சென்று வணங்குகிறார்கள். ஆனால் அந்த மூன்று பிரிவினருமே அவர்களின் ஆலயங்களுக்கு தாய் ஆலயமான தஞ்சூங் டோகாங் துவா டேக் காங் ஆலய வருடாந்திர ஆலய விழாவில் ஒன்றாகவே இணைந்து கொண்டு வழிபடுகிறார்கள்.
கிங் சாலையில் உள்ள கண்டோனீஸ் துவா பெட் காங் ஆலயத்தை வளம் மற்றும் செல்வத்தைத் தரும் கடவுளை தாம் வழிபடுவதற்கு என ஹக்கா மற்றும் கண்டோநீஸ் இனத்தவர் கட்டி உள்ளார்கள் . 1909 ஆம் ஆண்டில் சீரமைக்கப்பட்ட அந்த ஆலயம் பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாம். அதன் அருகில் உள்ள நின் யாங் கண்டோனீஸ் ஆலய கலை நுணுக்கத்தில் அந்த துவா பெட் காங் ஆலயம் அமைக்கப்படாமல் ஹோக்கியன் கலை நுணுக்கத்தில் அதை அமைத்து உள்ளார்கள்.
அந்த ஆலயத்தில் காண வேண்டியவை
தலைப்புரத்தின் மீது காணப்படும் வேலைபாடுகள் கலை நயம் மிக்கவை. அந்த சிற்பங்களில் டிராகனும் ( பறக்கும் நாகம் அல்லது விலங்கு ) சிறு விலங்குகளும் காணப்படுகின்றன. மூன்று பிரிவுகளாக உள்ள அந்த ஆலயக் கூடத்தின் இருபுறமும் தாங்கும் இடங்கள் அழகிய கலை வண்ணத்தில் கட்டப்பட்டு உள்ளன.
ஆலயம் போகும் வழி
வேல்ட் குவி பஸ் நிலையத்தின் (Weld Quay Bus Terminal ) அருகில் பென்கலன் வேல்டை (Pengkalan Weld) கடந்து வலப்புறம் திரும்பி கட் லேபுக் கிரிஜா (Gat Lebuh Gereja) எனும் இடத்தை அடைய வேண்டும். அங்கிருந்து பீச் ஜங்க்ஷனை அடைந்து லேபுக் கிரிஜாவரை ( Lebuh Gereja ) சென்று இடப்புறம் திரும்பினால் ஹியாங் சான் ஹோவே கவுனைத் (Heong San Hoay Kuan. ) தாண்டினால் கண்டனீஸ் ஆலயம் தெரியும்.
More Photos of the Cantonese Tua Pek Kong Temple


|