பெனாங்கில் உள்ள இந்த ஆலயம் வினோதமான ஒரு ஆலயம். அந்த ஆலயத்தில் அனைத்து இடங்களையும் ஆக்கரமித்து உள்ளது கண்ணாடி புட்டிகளே (ஆங்கிலத்தில் பாட்டில் எனப்படும் கண்ணாடி குடுவை) . அந்த ஆலயத்தின் பெயர் செங் சூ டிசே (Cheng Choo Tze ) ஆலயம். அது கியூ லோங் செம் டிசே (Kew Loong Sern Tze ) என்ற டாவோடிஸ்ட் தெய்வத்தின் ஆலயம். 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருபத்தி ஆறாம் தேதி கட்டப்பட்ட ஆலயம் தெலுக் டேம்போயாக் (Teluk Tempoyak. ) என்ற இடத்தின் அருகில் உள்ளது.
அந்த ஆலயத்துக்குச் செல்லும் வழி
அந்த ஆலயத்துக்குபடு மாங் கிராமத்தில் இருந்து காரில் செல்லலாம். படு மாங்கில் இருந்து பெர்மடாங் டமார் லவுட் (Permatang Damar Laut)என்ற இடம் சென்று இடப்புறம் திரும்பி டேம்போயூக் தெலுக்கை (Teluk Tempoyak) அடையவும். மலை மீது செல்கையில் ஆலயத்துக்குப் போகும் வழிப்பலகையை காணலாம். அங்கு காரை நிறுத்திவிட்டு ஆலயத்துக்கு நடந்து செல்ல வேண்டும். ராபிட் பெனாங் பஸ் நம்பர் 305 அங்கு செல்லும்.
ஆலயத்தில் பார்க்க வேண்டியவை
அந்த ஆலயத்தில் சுவர்களை அலங்கரிக்கும் நூற்றுக்கணக்கான அடுக்கி வைக்கப்பட்டு உள்ள சீன பீர் ( beer ) மற்றும் வயின் (wine ) பாட்டில்களைக் காணலாம். அதற்குக் காரணம் அங்குள்ள ஆலய தெய்வமான செங் சூ டிசேவுக்கு அப்படிப்பட்ட சாராயம் அருந்துவது பிடிக்குமாம்.
ஆலயத்தின் படங்கள்
செங் சூ டிசே ஆலயம் (1 October 2006)
ஆலய நுழைவாயில் படிகளில் வைக்கப்பட்டு உள்ள பாட்டில்கள் (1 October 2006)