World Travel Guidesபேட் குகை ஆலயம்


Exotic Tours of Asia
    Compare Hotel Room Rates from different Booking Sites     Follow Me on Pinterest 

Translated into Tamil by Santhipriya

Bat Cave Temple
Location Map


பெனாங் மலை அடிவாரத்தில் ஜேட் எம்பெரர் பெவிலியன் ( Jade Emperor's Pavilion) என்ற இடத்தின் அருகில் உள்ளதே பேட் குகை ஆலயம். நான் இதைப் பற்றி முன்னரே கேள்விப்பட்டு இருந்தாலும் இப்போதுதான் இங்கு வந்துள்ளேன். இந்த ஆலயம் வளம் மற்றும் செல்வத்தைத் தரும் கடவுளான துவா பேக் காங்கின் உள்ளூர் ஆலயம். உள்ளூரில் உள்ளவர்களுக்கு துவா பேக் காங்கின் மகிமையை பற்றியும் அந்த ஆலயத்தைப் பற்றிய விவரங்களும் தெரியவில்லை. அந்த கடவுளைப் பற்றி அறிய வேண்டும் எனில் அதன் தாய் ஆலயமான தன்ஜோங் டோகாங் துவா பேக் காங்கின் (Tanjong Tokong Tua Pek Kong Temple) ஆலயத்தைப் பற்றி படிக்கவும்.

சூதாட்டத்தில் வெற்றிப் பெற்று நிறையப் பணம் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக இந்த ஆலயத்துக்கு வந்து வேண்டுவது சர்வ சாதாரணமான விஷயம். இந்த ஆலயம் உள்ள இடத்தைப் பற்றி அந்த ஊரில் உள்ள சீனர்கள் பலருக்குத் தெரியவில்லை என்றாலும் சூதாட்டங்களில் வெற்றி பெற வேண்டும் என கொள்வதற்காக இந்த ஆலயத்தை தேடிக் கண்டு பிடித்து வரும் சீனர்கள் நிறையவே உள்ளனர். உண்மையில் இந்த ஆலயம் செல்வமிக்க வளமான ஆலயமாக இருக்கக் காரணம் சூதாட்டத்தில் வெற்றி பெறும் மக்கள் வந்து தமது காணிக்கைகளை அங்கு வந்து தவறாமல் செலுத்துவதினால்தானாம்.

இந்த ஆலயம் 1917 ஆம் அல்லது அதற்கு முற்பட்ட ஆண்டில் கட்டப்பட்டு உள்ளது என்பது அங்கு கிடைக்கும் செய்திப் புத்தகம் ஒன்றின் மூலம் மூலம் தெரிகின்றது. அந்த புத்தகத்தில் காணப்படும் செய்தியின்படி அந்த குகையில் ஒரு முனிவர் தவம் இருந்தாராம். அந்த குகையில் இருந்த வவ்வால்களை அங்கிருந்த மற்ற முனிவர்கள் மக்கள் தரும் தொந்தரவில் இருந்து காத்தனர். இது எந்த அளவு உண்மையான செய்தி என்பது தெரியவில்லை, மாறாக இது துவா பேக் காங்கின் உள்ளூர் ஆலயம் என்பதினால் இது புத்த மதத்தினரின் ஆலயம் இல்லை.

இன்னொரு கதையின்படி அந்த குகைக்குள் பிங் ஷுயி மாஸ்டர் ( feng shui ) ஒருவர் கணவன் மனைவிகளான இரண்டு கொக்குகளுடன் வந்து தங்கி இருந்து தான் மரணம் அடையும்வரை துவா பேக் காங்கை வணங்கி வந்தாராம். அவருக்குப் பிறகு அந்த கொக்குகளும் துவா பேக் காங்கை வணங்கி வந்தன. அவையும் மரணம் அடைந்தப் பின் அங்கு நிறைய வவ்வால்கள் வந்து குடியேறினவாம்.

இந்த ஆலயத்துக்கு செல்லும் வழி

ராபிட் பெனாங் பஸ் எண் '204 ' பெனாங் ரயில் நிலையத்துக்கு செல்கின்றது. பஸ் ராபிட் பெனாங் பஸ் ஸ்டாப்பில் இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றால் ஒரு குறுகிய சாலை வரும். அதன் ஆரம்பத்தில் ஜேட் எம்பெரர் பெவிலியன் வரும். அந்த சாலையில் சென்று சற்று தூரத்தில் உள்ள வலதுபுற சாலையில் திரும்பவும். அங்கு ஆலயம் செல்வதற்கான வழி காட்டும் பலகை உள்ளது. அந்த பலகையில் இருந்து சுமார் ஐம்பது மீட்டர் தொலைவில் ஆலயம் உள்ளது.

ஆலயத்தில் பார்க்க வேண்டியவை

அந்த ஆலயத்துக்குள் வாடிய இலைகளைப் போல பல வவ்வால்கள் தொங்கிக்கொண்டு இருக்கும். முதலில் நுழைந்ததும் அங்குள்ள இருட்டில் நமது கண்களுக்கு அவை தெரிவது இல்லை. ஆனால் சிறிது நேரத்தில் நாம் இருட்டில் நின்றுகொண்டு இருப்பதினால் அவை நம் கண்களில் புலப்படும். அந்த குகை இருட்டாக இருப்பதினால் நம் தலை பாறையின் மேல் பகுதியில் தொங்கும் வவ்வால்கள் மீது மோதிக் கொள்ளாமல் இருக்க நாம் செல்ல வேண்டிய வழியைக் காட்டும் வெள்ளைக் கோடுகளைப் போட்டு வைத்து உள்ளனர். அந்த இருட்டில் புகைப்படங்களை எடுப்பது கடினமாக உள்ளது.

ஆலயத்தின் பக்கத்தில் உள்ள பிற இடங்கள்

The following are sights within the immediate vicinity or close by:
  • ஜேட் எம்பெரர் பெவிலியன் ( Jade Emperor's Pavilion) : Just a walking distance away
  • பியோ ஹியாங் லிம் ஆலயம் ( Beow Hiang Lim Temple )
  • ஹுவாட் ஹுவா லியாம் ஆலயம் ( Huat Huah Liam Temple )
  • அயர் இதாம் மாஹா மாரியம்மன் ஆலயம் ( Ayer Itam Maha Mariamman Temple )
  • கேக் லோக் சி ஆலயம் ( Kek Lok si): Not actually close by, since you have to drive or take the bus there, but worth a visit if you have the time

    பட் குகை ஆலய படங்கள்


    பத் குகை ஆலயம் (3 September 2008)


    பத் குகை ஆலய நுழை வாயில் (3 September 2008)



    துவா பேக் காங்கின் பிரார்த்தனைக் கூடம் (3 September 2008)


    ஆலயத்துக்குள் ஆமை சிலை. அதை தடவினால் அதிருஷ்டம் கிடைக்குமாம். (3 September 2008)



    ஆலயத்துக்குள் பல வவ்வால்கள் (3 September 2008)


    ஆலயத்துக்குள் வாடிய இலைகளைப் போல பல வவ்வால்கள் (3 September 2008)


    Chinese Temples in Penang





  • Tips to become a smart traveler: Useful tips to remember, to get the best out of your travels.
  • Preparing for a Trip: Systematic approach to help you prepare for your trip.
  • How to plan your travel itinerary: Step-by-step build to creating the itinerary for your trip.
  • How to compare hotel room rates: Learn to use a booking search engine to compare rates across all major booking sites.
  • How to pack your luggage: Useful steps to take when packing your luggage.
  • Packing List (PDF): Print out this free packing list to make sure you don't forget anything for your trip.
  • Voltage, Frequency, Plugs & Sockets of the World: Learn about the mains electricity supply in the world.
  • Travelers' List of Plugs and Sockets (PDF): Easy-to-use list of electricity and plugs for all countries.
  • Making International Direct Dail Calls: Learn to make IDD calls from anywhere in the world.
  • IDD Call Prefixes & Country Codes (PDF): Listing of Call Prefixes and Country Codes on one page for you to bring on your trip.
  • Safety Tips When Traveling Alone: Useful advice for when you travel on your own.
  • Guide to Health Matters related to Travel: Comprehensive coverage of different issues related to your health when traveling.
  • Getting Travel Insurance for your trip: Benefits of travel insurance, and advise on when you should signing up for one.
  • Improve your travel photography: Tips to improve your photography skills, especially when traveling.
  • Guide to Traveling Around the World: Useful tips for encircling the globe.


  • Find a hotel







    Follow Me on Pinterest

    Point - Click - Discover!

    Thanks for visiting this webpage. To continue exploring, choose another destination!


    My World Travel Guides - celebrating a beautiful world beautifully.

    Earning a living as a Happy Jobless Guy

    I am a Happy Jobless Guy! I am one of the few people who is fortunate enough to earn an income from my websites that I don't to go out to work. My sites get thousands of visitors every day. It has been a long process, but it is something everybody can achieve, and that means YOU. The following are some articles which you might want to read if you want to do what I do:
    1. Money Making Manual
    2. How to earn from writing websites
    3. Guide for earning a living without holding a job
    4. Complete Step-by-Step e-Business Building System